பப்ஜி விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு – 200 கேம் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்

 

பப்ஜி விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு –  200 கேம் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்

 200-க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.

வைரஸ் நிரம்பிய வலைத்தளங்களை மறைமுகமாக திணித்து கைபேசியின் ஹார்ட்வேரை பாதிக்கும்  200-க்கும் மேற்பட்ட செயலிகளை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான மேம்பாட்டினை வழங்கி வரும் கூகுள் செக்பாயின்ட் இம்மாதிரியான செயலிகளை கண்டறிந்து வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த செயலிகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.

play store

 கேம் சார்ந்த இந்த செயலிகள் தற்போது வரை பிளே ஸ்டோரில் 150 மில்லியனுக்கு அதிகமான தரவிறக்கங்களை கண்டுள்ளன. இவற்றில் குறிப்பாக Snow Heavy Excavator Simulator என்ற கேம் அதிகபட்ச டவுன்லோடுகளை பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கைபேசி பயனாளர்களுக்கான பிளே ஸ்டோரில் வழங்கப்பட்டு வந்த செயலிகளில் சுமார் 7 லட்சம் செயலிகளை நீக்கியிருந்தது. தற்போது தொடர்ந்து பல கட்டங்களாக பாதுகாப்பற்ற செயலிகளை அவை சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிக்கை மூலம் கண்டறிந்து நீக்கி வருகின்றது.

play store

அந்த வகையில் செக்பாயின்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையில் ஹார்ட்வேர் சார்ந்த தீங்கிழைக்கும் மென்பொருள்களை பின்புலத்தில் கொண்ட 200 க்கும் மேற்பட்ட கேமிங் செயலிகளை கண்டறிந்துள்ளது. இவை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

சின்பேட், எனப்படும்  மால்வேர் ஒரு விளம்பரம் வழங்கும் தளமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் 210 செயலிகள் பாதிப்படைந்துள்ளன. ஆனால், செயலியை உருவாக்கியவர்கள் அறியாமலே கூட இந்த மால்வேரை புகுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலேட்டமாக பார்த்தால்  பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், கூகுள் ஸ்கேனிங் மூலம் சிக்கிக் கொள்ளாத வகையில் இந்த மென்பொருளை வடிவமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.