பப்ஜி விளையாடியதால் பக்கவாதம்: 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி!

 

பப்ஜி விளையாடியதால் பக்கவாதம்: 19 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி!

பப்ஜி விளையாடிய  19 வயது இளைஞர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்: பப்ஜி விளையாடிய  19 வயது இளைஞர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

pubg

ஹைதராபாத்தைச்  சேர்ந்த  19 வயது இளைஞர் ஒருவருக்குக்  கடந்த 26ஆம் தேதி வலது காலும், வலது கையும் செயல்படாமல் போயுள்ளது. இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்த நிலையில் பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ஏற்பட்ட ரத்தத் தடையால் பக்கவாதம் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதற்கு முக்கிய காரணம்  பப்ஜி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடியதே காரணம் என்றும்  மூளைக்குச் செல்லும் ரத்தம் தடைப்படுவதால் உடலுறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த வகையான பக்கவாதம் வயதானவர்களையே தாக்கும்’ என்று தெரிவித்தனர். 

pubg

பாதிக்கப்பட்ட இளைஞர் சாப்பிடாமல், தூங்காமல் சுமார் 10 மணிநேரம் வரை பப்ஜி விளையாடியதாகவும், திடீரென்று கை, கால்கள் அசைக்க முடியவில்லை என்று கூறியதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.  பப்ஜி விளையாட்டுகளின் மூலம் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.