பப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகம்

 

பப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகம்

பப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை: பப்ஜி மொபைல் கேமில் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பப்ஜி மொபைல் கேம் தான் இந்தியாவில் இன்றைக்கு டாப் டிரெண்டிங் கேம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவுக்கு இரவும், பகலும் பலர் அந்த மொபைல் விளையாட்டிலேயே மூழ்கிக் கிடக்கின்றனர் என்று சொல்லலாம். லைவ் வசதி மூலம் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது போல் இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே பப்ஜி கேம் உலகளவிலும், இந்திய அளவிலும் வெகு சீக்கிரத்தில் பிரபலம் அடைந்தது. ஆனால் அதேசமயம் சீக்கிரத்திலேயே பெற்றோர்களிடம் எதிர்ப்பையும் சம்பாதித்து விட்டது. நேரம் காலம் பாராமல் சிறுவர்கள், மாணவர்களை விளையாடத் தூண்டும் விதமாக இந்த கேம் இருப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

அந்த வகையில் பப்ஜி கேம் விளையாடுவோர் அதற்கு அடிமையாவதை தடுக்கும் நோக்கில் அந்த கேம் விளையாட தடை விதிப்பதாக இந்தாண்டு ஜனவரி மாதம் குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தடையை மீறி பப்ஜி விளையாடிய பத்து பேர் சமீத்தில் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்த சம்பவமாக அமைந்தது. இந்நிலையில், தொடர்ந்து அதிக நேரம் பப்ஜி விளையாடும் போது திரையில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் வகையில் ‘ஹெல்த் ரிமைண்டர்’ அம்சம் இந்த மொபைல் கேமில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து பப்ஜி கேமை விளையாட முற்படும்போது, தானாகவே கேம் நிறுத்தப்பட்டு விடும். அதன் பின்பு குறிப்பட்ட நேர இடைவெளிக்கு பிறகு தான் மீண்டும் கேமை விளையாட முடியும். பப்ஜி விளையாடுவோரில் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் ஹெல்த் ரிமைண்டர்களை ஆக்டிவேட் செய்ய கோரும் வகையில் புதிய அப்டேட் இந்த கேமில் இடம்பெற்றுள்ளது. இந்த அம்சம் ஆக்டிவேட் ஆனதும், தொடர்ந்து ஆறு மணி நேரங்களுக்கும் அதிகமாக பப்ஜி விளையாடினால் கேம் தானாக நிறுத்தப்பட்டு விடுகிறது. சிலருக்கு இந்த இடைவெளி இரண்டு மணி நேரங்களிலும் ஏற்படுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.