பப்ஜியில் தோல்வி அடைந்ததால் மாரடைப்பு வந்து இறந்த சிறுவன்: 6 மணிநேர தொடர் ஆட்டத்தால் நடந்த விபரீதம்!?

 

பப்ஜியில் தோல்வி அடைந்ததால் மாரடைப்பு வந்து இறந்த சிறுவன்: 6 மணிநேர தொடர்  ஆட்டத்தால் நடந்த விபரீதம்!?

பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் சிறுவன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம்: பப்ஜி விளையாட்டில் தோல்வி அடைந்ததால் சிறுவன் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

pubg

‘பப்ஜி’  விளையாட்டு இளைஞர்கள், சிறுவர்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளது. பலர் இந்த விளையாட்டில் பல மணிநேரம் மூழ்கிப் போய்  கிடக்கின்றனர். இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் அதனால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிலர் இந்த விளையாட்டால் மரணத்தைச் சந்திக்கும் நிகழ்வுகள் கூட அரங்கேறி வருகிறது. 

pubg

அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள நீமுச் டவுன்பகுதியை சேர்ந்த மாணவர் ஃபர்கான் குரேஷி. இவர்  அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 -வது வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் பப்ஜி வெறியரான ஃபர்கான் குரேஷி  மதியம் சாப்பிட்டு விட்டு சுமார் 6 மணிநேரம் தொடர்ந்து பப்ஜி விளையாடியுள்ளார். இதையடுத்து விளையாட்டில் தோல்வி அடைந்ததால், அதிர்ச்சியடைந்த அவர் கோபத்தில் காதில் மாட்டியிருந்த இயர்போனை  எறிந்துவிட்டு,  உன்னாலதான் நான் தோத்துட்டேன் இனிமேல் உன்கூட விளையாட மாட்டேன் கத்தியதாகத் தெரிகிறது. சில நேரத்தில் ஃபர்கான்  மயக்கமடைந்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அவரது பெற்றோர் அவர் மயக்க நிலையில் இருப்பதைப்  பார்த்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் ஃபர்கான்  மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

suicide

இது குறித்து பேசியுள்ள  ஃபர்கானின்  பெற்றோர், ‘எங்கள் மகன் ஒரு நீச்சல் வீரன் அவனுக்கு எப்படி மாரடைப்பு வந்தது என மருத்துவர்களிடம் கேட்டோம். ஆனால்  பப்ஜி மீதான ஆர்வமும், அதில் ஏற்பட்ட தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மனமும் தான் அவனுக்கு மாரடைப்பு வந்ததற்குக் காரணம்  என்று மருத்துவர்கள் கூறினர். என் மகனைப் போன்ற பல பிள்ளைகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க வேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.