பப்ஜிக்கு ‘நோ’ சொன்ன கணவர்: கோர்ட் படியேறிய மனைவி; தொடரும் பப்ஜி அவலங்கள்!

 

பப்ஜிக்கு ‘நோ’ சொன்ன கணவர்: கோர்ட் படியேறிய மனைவி; தொடரும் பப்ஜி அவலங்கள்!

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரிடம் இளம்பெண் ஒருவர் விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுகிறது. 

பப்ஜி விளையாட அனுமதிக்காத கணவரிடம் இளம்பெண் ஒருவர் விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுகிறது. 

பப்ஜி விளையாட்டு பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை  மிகவும் பிரபலமாகி உள்ளது. பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் அதனால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

pubg

இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மனைவியை பப்ஜி விளையாடக் கூடாது என்று சொன்ன கணவரிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமணமான அந்த இளம்பெண் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் மூழ்கிப்போயுள்ளார்.இதனால் அவர் தன்னிலை மறந்து செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பப்ஜி விளையாடக் கூடாது என்று அவரது கணவர் கண்டிஷன் போட கணவரை விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளார் இருபதே வயதான அந்த இளம்பெண். 

pubg

இது குறித்து அஜ்மான் நகர போலீஸ் அதிகாரி  வாஃபா கலீல் அல் ஹோசானியிடம்  அவர் புகார் தெரிவித்துள்ளார். அதில், ‘தான் விரும்பும் பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தனக்கு இருக்கிறது.  பப்ஜி என் உறவினர்களும், நண்பர்களும் விளையாடுகிறார்கள். ஆனால்  என் கணவர் அந்த சுதந்திரத்தைத் தர மறுக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

suicide

முன்னதாக பெற்றோர் பப்ஜி விளையாடக் கூடாது என்று கூறியதால் மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.