பப்ஜிக்கு ‘நோ’ சொன்ன அம்மா: பிணமாக தொங்கிய மகன்!

 

பப்ஜிக்கு ‘நோ’ சொன்ன அம்மா: பிணமாக தொங்கிய மகன்!

பப்ஜி விளையாட்டு பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை  மிகவும் பிரபலமாகி உள்ளது. பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.

ஹரியானா : பப்ஜி விளையாடக் கூடாது என்று கூறியதால்  சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பப்ஜி விளையாட்டு பெரியோர்கள் முதல் சிறுவர்கள் வரை  மிகவும் பிரபலமாகி உள்ளது. பலர் இந்த விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர். இந்த விளையாட்டு வன்முறையைத் தூண்டுவது போல் அமைந்துள்ளதாகப் பல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஒரு சில கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த விளையாட்டைச் சிறுவர்களும், இளைஞர்களும் விளையாடுவதை நிறுத்தவில்லை. அதே சமயம் இந்த விளையாட்டு மனதளவில் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதும் அதனால் அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

pubg

இந்நிலையில் ஹரியானா ஜிண்ட் பகுதியைச்  சேர்ந்த 17 வயது  சிறுவன் ஒருவன் தொடர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் சிறுவனின் தாய்  படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ந்து பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறாய். இனி நீ பப்ஜி  விளையாடக்கூடாது என்று திட்டியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சிறுவன் தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.

pubg

உயிரிழந்த சிறுவனின் தந்தை காவல்துறை அதிகாரி ஆவார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் பணிக்கு சென்ற நேரத்தில் மனைவி பப்ஜி விளையாடக் கூடாது என்று திட்டி செல்போனை பிடுங்கி வைத்து கொண்டுள்ளார். இதையடுத்து தனது  அறைக்கு சென்ற மகன், தற்கொலை செய்து கொண்டுள்ளான். குழந்தைகளின் மூளையை பாதிக்கும் இதுபோன்ற விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.