பன்மொழி இந்தியாவின் பலவீனம் அல்ல! – ராகுல்காந்தி ட்வீட்

பன்மொழி இந்தியாவின் பலவீனம் அல்ல! – ராகுல்காந்தி ட்வீட்

இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Rahul Gandhi

உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்தவாரம் ஒரே நாடு ஒரே மொழி அது இந்தி மொழி என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் பல மொழிகளை கொண்டிருப்பது இந்தியாவின் பலவீனமாகாது என தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.