பன்னீருக்கு பதிலாக சிக்கன் : ஜொமோட்டோவுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம்!

 

பன்னீருக்கு பதிலாக சிக்கன் : ஜொமோட்டோவுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம்!

சிக்கன் மசாலாவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்முக் புகார் அளித்துள்ளார்.

புனே: பன்னீர் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசாலாவை கொடுத்தனுப்பிய ஜொமோட்டோ நிறுவனத்திற்கு  ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து புனே நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

zomato

மும்பை புனேவை சேர்ந்தவர் வழக்கறிஞர் சண்முக் தேஷ்முக். இவர் ஜொமோட்டோ ஆப்பில்  பன்னீர் மசாலாவை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக அவருக்கு சிக்கன் மசாலாவை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து புனே நுகர்வோர் நீதிமன்றத்தில் சண்முக் புகார் அளித்துள்ளார். அதில், பன்னீர் மசாலாவும், சிக்கன் மசாலாவும் ஒரே மாதிரியாக இருந்ததால்  கண்டுபிடிக்க முடியவில்லை. சாப்பிட பிறகே தெரிந்தது. ஏற்கனவே ஒருமுறை இதே போன்றே அசைவ உணவை அனுப்பினர்’ என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ஜொமோட்டோ  நிறுவனம், இது எங்கள் தவறு இல்லை. உணவகம் தான் மாற்றி அனுப்பியுள்ளது என்று  விளக்கமளித்தனர். 

panner

இந்நிலையில் நுகர்வோர் நீதிமன்றம் ஜொமோட்டோ நிறுவனத்திற்கு,  சேவை குறைபாட்டுக்காக ரூ.50 ஆயிரமும், நுகர்வோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அபராத  தொகையை 45 நாட்களுக்குள் அளிக்கவேண்டும் கூறியுள்ளது.