பன்னாட்டு கப்பல்கள் மீன்பிடிக்கின்றன… தமிழக மீனவர்களுக்கு அநீதி ஏன்? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!!

பன்னாட்டு கப்பல்கள் மீன்பிடிக்கின்றன… தமிழக மீனவர்களுக்கு அநீதி ஏன்? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி!!

ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். எல்லா தொழில்களும் முடங்கிய நிலையில், மீன்பிடி தொழிலும் பாதிக்கப்பட்டது. மீன் பிடித்தல், மீன்களைப் பதப்படுத்துதல், மீன்களை வளர்த்து விற்பனை செய்தல், அதேபோல மீன்களை சேமித்து வைத்தல், வளர்ப்பு மீன்களுக்கு தேவையான உணவுகளை தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்க்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.

fishermen-78

மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் ஏப்.15 ஆம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் தமிழகத்தில் அமல்படுத்தப்படும். இதனால் மத்திய அரசு மீன்பிடிக்க அனுமதியளித்த நிலையிலும், மீன்பிடி தடை காலத்தினால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னைக்கு மிக அருகாமையில் வெளிநாட்டு கப்பல்கள் தமிழக எல்லைக்குள் வந்து மீன்பிடித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் தமிழக மீனவர்களுக்கு இது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இனவிருத்திக்கான காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று  பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?” என தெரிவித்துள்ளார்.