பனியில் உறைந்து போன பூனை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்த வினோதம்!

 

பனியில் உறைந்து போன பூனை: நீண்ட போராட்டத்திற்கு பிறகு உயிர் பிழைத்த வினோதம்!

அமெரிக்காவில், உறைபனியில் சிக்கி உறைந்துபோன பூனை, பின்னர், இறுதி நிமிடங்களில் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா: அமெரிக்காவில், உறைபனியில் சிக்கி உறைந்துபோன பூனை, பின்னர், இறுதி நிமிடங்களில் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின், மோன்டானா மாகாணத்தின் காலீஸ்பெல் நகரில், ஃப்ளூபீ எனப் பெயரிடப்பட்ட பூனை ஒன்று ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.  சில தினங்களுக்கு முன், வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், பனிக்கட்டிகளுக்கு சிக்கி, உறைந்து போயுள்ளது.

cat

இதையடுத்து, பூனையை காணாமல் தவித்து போன அதன் உரிமையாளர் நகரின் பலபகுதிகளில் தேடியுள்ளார். பின்பு இறுதியாக உறைந்த நிலையில் இருந்த  பூனையை மீட்டு, கால்நடை மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது, அந்த பூனையின் உடல் வெப்பநிலை மைனஸ் 90 டிகிரியில் இருந்தது.

cat

பின்னர் சுடுநீர் ஒத்தடம் உள்ளிட்ட பல சிகிச்சை முறைகளை பின்பற்றி, சுமார் ஒன்றரை மணி நேரத்தில், அந்த பூனையை கால்நடை மருத்துவர்கள் மீட்டெடுத்தனர்.