பனிமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா சரண் : வைரல் வீடியோ!

 

பனிமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா சரண் : வைரல் வீடியோ!

நடிகை ஸ்ரேயா பனியில் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது

நடிகை ஸ்ரேயா பனியில் விளையாடும் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிவாஜி,தமிழ்மகன்,கந்தசாமி என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஸ்ரேயா நடிப்பில் 2017ஆம் ஆண்டு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் திரைப்படம் வெளியானது. தற்போது அரவிந்த் சாமியுடன் இவர் நடித்திருந்த நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஸ்ரேயா சரண் பனியில் விளையாடும் வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதில், மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இடம்பெற்றுள்ள புது வெள்ளை மழை பாடலை ஹம்மிங் செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது.