பனிச்சரிவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவவீரர்.. 42 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

 

பனிச்சரிவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவவீரர்.. 42 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

அருணாச்சல பிரதேசம் ரியாண்டு மலைப் பகுதியிலிருந்து வாகனம் மூலம் பொறியாளர் குழுவினர் வேறு இடத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளனர். பனிப் பொழிவால் அவர்கள் சென்று வாகனம் விபத்துக்குள்ளானது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூரைச் சேர்ந்தவர் சந்தோஷ்(23). இவர், மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப் சாப்பர் கிரேடு பணியாற்றி வந்தார். வடமாநிலங்களில் ஏற்படும் கடும் பனிப் பொழிவின் காரணமாகப் பல சாலை விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 8 ஆம் தேதி அருணாச்சல பிரதேசம் ரியாண்டு மலைப் பகுதியிலிருந்து வாகனம் மூலம் பொறியாளர் குழுவினர் வேறு இடத்திற்குச் சென்று கொண்டிருந்துள்ளனர். பனிப் பொழிவால் அவர்கள் சென்று வாகனம் விபத்துக்குள்ளானது. 

ttn

அந்த விபத்தில் சந்தோஷ் உட்பட 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ராணுவ வீரர் சந்தோஷின் உடல் விமானம் மூலம் அருணாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூருக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூருக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்குக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், ஏ.டி.எஸ்.பி சக்திவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அதன் பின்னர், மாவட்ட ஆட்சியர் வீரர் சந்தோஷின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து, ராணுவ அலுவலர் சின்னராஜ் தலைமையில் 24 ராணுவ வீரர்கள் சந்தோஷின் உடலைத் தூக்கிச் சென்று, 42 குண்டுகள் முழங்க அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.