பத்ம ஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா பங்காரு அடிகளார்: சமூக வலைதளங்களில் எழும் விமர்சனம்

 

பத்ம ஸ்ரீ விருதுக்கு தகுதியானவரா பங்காரு அடிகளார்: சமூக வலைதளங்களில் எழும் விமர்சனம்

பங்காரு அடிகளாருக்கு இந்திய அரசாங்கம் பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

சென்னை: பங்காரு அடிகளாருக்கு இந்திய அரசாங்கம் பத்ம ஸ்ரீ விருது அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பிரபுதேவா, பங்காரு அடிகளார், பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் சங்கர் மகாதேவன் ஆகிய 9 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்காரு அடிகளாருக்கு பத்ம ஸ்ரீ அறிவித்தது கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவுகளில் ஆன்மீகம் கிடையாது, பங்காரு அடிகளார் கல்வி நிலையங்கள் வைத்து சேவை செய்வதால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

பங்காரு அடிகளார் தலைமையில் இயங்கும் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்கள் எல்லாம் இலவச கல்வி ஒன்றும் வழங்கவில்லை எனவும், ஒரு சில படிப்புகள் இலவசமாக படிக்க முடிகிறது எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் பங்காரு அடிகளாரை கலாய்த்து விமர்சனம் செய்து வருகின்றனர்.