பத்மஸ்ரீய நீங்க வச்சுக்கங்க, கோவிலை நாங்க வச்சுக்கிறோம் – மேல்மருவத்தூர் பேக்கரி டீலிங்

 

பத்மஸ்ரீய நீங்க வச்சுக்கங்க, கோவிலை நாங்க வச்சுக்கிறோம் – மேல்மருவத்தூர் பேக்கரி டீலிங்

நாடாளுமன்ற தேர்தலையோட்டி அவர் சார்ந்த சமுதாய ஓட்டுக்கள் மற்றும் இந்துக்கள் ஓட்டுக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியாக இது அப்போது பேசப்பட்டது. விருது கிடைத்த சந்தோசத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டாடினார் பங்காரு அடிகளார். ஆனால், இப்போது அவருடைய அடிமடியிலேயே கைவைத்துவிட்டார்கள் மத்திய மாநில ஆட்சியாளர்கள்.

கடந்த ஜனவரி மாதம் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மா பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையோட்டி அவர் சார்ந்த சமுதாய ஓட்டுக்கள் மற்றும் இந்துக்கள் ஓட்டுக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியாக இது அப்போது பேசப்பட்டது. விருது கிடைத்த சந்தோசத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டாடினார் பங்காரு அடிகளார். ஆனால், இப்போது அவருடைய அடிமடியிலேயே கைவைத்துவிட்டார்கள் மத்திய மாநில ஆட்சியாளர்கள்.

Bangaru gets Badma Sree

மேல்மருவத்தூர் சக்தி பீடத்தை இந்து அறநிலையத்துறையின்கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவங்கிவிட்டன. இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுசெய்யச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சூழ்ந்துகொண்டு பீட ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஆய்வு செய்யமுடியாமல் போனதால், அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்துவிட்டனர். இந்த மடத்திற்கு சொந்தமாக ஆயிரகணக்கான கோடிகள் வருமானம் என சொல்லமுடியாவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான கோடிகளில் வருமானம் கொட்டுகிறது. பக்தர்கள் காணிக்கை, கல்லூரிகள், பள்ளிகள், பாலிடெக்னிக்குகள், கல்யாண மண்டபங்கள் என வருமானத்திற்கு குறைவில்லை. இப்போது மடத்தின் இடத்தை குடுத்தால், பின் இருக்கும் இடத்தை கேட்பார்கள் என்பதை அறியாதவர் அல்லர் பங்காரு அடிகள்.

Melmaruvathur Institute

ஏற்கெனவே பீட மடாதிபதி உரிமைக்காக பங்காரு அடிகளாரின் மகன்கள் இருவரும் முட்டிமோதிக்கொண்டு இருக்கும்போது, இப்போது அரசாங்கமே கோவிலையும் சொத்துக்களையும் ஏற்று நடத்த ஆயத்தமாகி வருவது பங்காரு அடிகளுக்கு பேரதிர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. இணக்கமான ஆளுங்கட்சி ஆட்களிடம் விசாரித்தால், பத்மஸ்ரீ விருது உங்களுக்கு, பீடம் எங்களுக்கு என கெக்கெபிக்கே என சிரிக்கிறார்களாம். சரி, இந்து அறநிலையத்துறை மாநில அரசின்கீழ் வருகிறது, இதற்கும் மத்திய அரசு வழங்கும் விருதுக்கும் முடிச்சு போடலாமா என சந்தேகமே வேண்டாம். இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் இருவேறு கட்சிகளா ஆட்சி நடத்துகின்றன?