பத்மவிருதுகள் 2019: தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்; யார் யார் தெரியுமா?

 

பத்மவிருதுகள் 2019: தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள்; யார் யார் தெரியுமா?

இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

புதுதில்லி: இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர், நடன இயக்குநர் பிரபுதேவா, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி,  ட்ரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்,  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட 94  பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த தீஜன் பாய்,  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில்குமார் மனிபாய், பல்வான்ட் மொரேஹ்வர்,  வெளிநாட்டினர் இஸ்மாயில் ஒமர் குல்லா ஆகியோருக்குப் பத்ம விபூஷண் விருதும், மலையாள நடிகர் மோகன்லால், கேரளாவைச் சேர்ந்த இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும்  அறிவிக்கப்பட்டுள்ளது.