பத்த வச்சுட்டியே பரட்ட; ரஜினி – எஸ்.ஜே.சூர்யா இடையே சண்டைமூட்டும் ஏ.ஆர். முருகதாஸ்?!

 

பத்த வச்சுட்டியே பரட்ட; ரஜினி – எஸ்.ஜே.சூர்யா இடையே சண்டைமூட்டும் ஏ.ஆர். முருகதாஸ்?!

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார்.

பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பற்றிய அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. இதில் ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. அதேபோல் தற்போது ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

sj

‘மெர்சல்’, ‘ஸ்பைடர்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லத்தனத்தை பார்த்து மெர்சல் ஆகாதவர்களே இருக்க மாட்டார்கள். அதனால் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே. சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது!

sj

ஆனால் அவர் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கும் ‘உயர்ந்த மனிதன்’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

ரஜினிக்கு எதிராக நடிக்க எஸ்.ஜே.சூர்யா சம்மதம் தெரிவித்தால். மீண்டும் ஒரு மெர்சலான வில்லன் கெட்டப்பில் எஸ்.ஜே.சூர்யாவை பார்க்கலாம். ஆனால் ரஜினி படத்தில் வில்லன்கள் ஸ்கோர் செய்வது சிரமமான விஷயம்.

ramya

இத்தனை ஆண்டு காலம் ரஜினி நடித்த படங்களில், நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்) கதாபாத்திரம் மற்றுமே பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க

திருநம்பிகளுக்கு வேலை கொடுத்த அமேசான் நிறுவனம்; ஒரே பைக்கில் டெலிவரி!