பத்து வருடங்களில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும்மேல் சரிவை சந்தித்த அனில் அம்பானி!

 

பத்து வருடங்களில் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கும்மேல் சரிவை சந்தித்த அனில் அம்பானி!

ஓரளவு லாபம் ஈட்டிவந்த ரிலையன்ஸ் மியூச்சுவல் நிறுவனத்தையும், மற்றொரு பங்குதாரரான ஜப்பானின் நிப்பான் நிறுவனத்திற்கு விற்கவேண்டிய இக்கட்டான சூழல். ஆனால் அதேநேரம், உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறி கொண்டிருக்கிறார்.

உலகின் ஆறாவது பணக்காரராக 2008ஆம் ஆண்டு 42 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் கெத்தாக வலம் வந்தவர் அனில் அம்பானி. அதே வருடம், உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரர் அனிலின் சகோதரர் முகேஷ். சரியாக 11 வருடங்களுக்குப் பிறகு, இப்போது அனில் அம்பானியின் பெயர் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியிலில் இடம்பெறாதது மட்டுமல்லாமல், இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் பட்டியலில்கூட மிக பின்தங்கிய இடத்தில்தான். நேற்றைய பங்குச்சந்தை முடிவில், அனில் அம்பானியின் நிறுவன பங்குகளின் மொத்த‌ மதிப்பு, 773 மில்லியன் டாலர்கள். சரியாக 11 வருடங்களுக்கு முந்தைய நிலவரத்துடன் ஒப்பிட்டால், இது தோராயமாக 98% சரிவு.

Ambani Brothers

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சர், ரிலையன்ஸ் நேவல் & இன்சினியரிங், ரிலையனஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், தற்போது முடக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட கம்பெனிகளில் அனிலின் பங்கு 75% குறைவுதான். இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் மட்டுமே 58,000 கோடிக்கும்மேல் கடன் வாங்கியதால்தான் இவ்வளவு பெரிய இழப்பும். ஓரளவு லாபம் ஈட்டிவந்த ரிலையன்ஸ் மியூச்சுவல் நிறுவனத்தையும், மற்றொரு பங்குதாரரான ஜப்பானின் நிப்பான் நிறுவனத்திற்கு விற்கவேண்டிய இக்கட்டான சூழல். ஆனால் அதேநேரம், உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறி கொண்டிருக்கிறார்.

Rafael fighter jet

அனில் அம்பானியும் இந்த கடன் பிரச்னையிலிருந்து நிச்சயம் மேலே வருவார். எப்படின்னு கேக்குறீங்களா? இன்னும் ஒரு 100 ரஃபேல் விமானத்தை பிரான்ஸிடமிருந்து ஆர்டர் குடுக்க வேண்டியதுதான்! 

க‌டனில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானியை மீட்டு மேலேகொண்டுவரும் உன்னத நோக்கத்துடன்தான் மோடிஜி ரஃபேல் டீலிங்கையே திருத்தினார். இதை புரிந்துகொள்ளாத எதிர்கட்சிகாரர்கள்தான் இரக்கம் இல்லாமல், அம்பானிமேல் குற்றம் சாட்டுகிறார்கள்.