பத்திரிகை சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்கிறது தெரியுமா? தம்பிதுரை விளக்கம்

 

பத்திரிகை சுதந்திரத்தில் தமிழகம் எப்படி இருக்கிறது தெரியுமா? தம்பிதுரை விளக்கம்

தமிழகம் பத்திரிகை சுதந்திரத்தில் எப்படி இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்திருக்கிறார்.

சென்னை: தமிழகம் பத்திரிகை சுதந்திரத்தில் எப்படி இருக்கிறது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விளக்கமளித்திருக்கிறார்.

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக நக்கீரன் இதழில் கட்டுரை ஒன்று வெளியானதால் அந்த இதழின் ஆசிரியர் கோபால் தேசத்துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற துணையோடு விடுதலை ஆனார். அவரை கைது செய்தது அனைவரிடத்திலும் அதிருப்தியை உருவாக்கியது. மேலும் கோபால் கைதின் மூலம் தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் கொலை செய்யப்பட்டுவிட்டது என பலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், பேச்சு, எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. பத்திரிகை சுதந்திரத்தில் தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள திமுக மறுக்கிறது.திமுக – பாஜக கூட்டணி வைக்க முயற்சிகள் நடக்கின்றன என்றார்.