பத்திரிகை உரிமையாளர் என்று கூறி வசூல் வேட்டையில் இறங்கிய நபர் கைது!

பத்திரிகை உரிமையாளர் என்று கூறி வசூல் வேட்டையில் இறங்கிய நபர் கைது!

ராமநாதபுரத்தில் பத்திரிகை உரிமையாளர் என்று கூறி ஒருவர் கட்டப்பஞ்சாயத்து, பண வசூலில் ஈடுபடுட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலி பத்திரிகையாளரை கைது செய்ய ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரெண்டு வருண் குமார் உத்தரவிட்டார்.

ராமநாதபுரத்தில் பத்திரிகை உரிமையாளர் என்று கூறி வசூல் வேட்டையில் இறங்கிய போலி பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரத்தில் பத்திரிகை உரிமையாளர் என்று கூறி ஒருவர் கட்டப்பஞ்சாயத்து, பண வசூலில் ஈடுபடுட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலி பத்திரிகையாளரை கைது செய்ய ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரெண்டு வருண் குமார் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, காரில் பிரஸ் என்றும் கலெக்டர், எஸ்.பி, நீதிபதிகள் என உயர் அதிகாரிகள் வாகனங்களில் ஒட்டியிருப்பது போன்று வித்தியாசமான முறையில் பத்திரிகை பெயரை ஒட்டியிருந்த வண்டியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்த அப்துல் ரசாக் என்பவர் தான் ஒரு பத்திரிகை உரிமையாளர் என்றும் என்னுடைய வண்டியை நிறுத்தி சோதனையிட எவ்வளவு தைரியம் என்றும் கேட்டு சண்டைபோட்டுள்ளார். அவர் மீது சந்தேகம் கொண்ட போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

fake-journalist

அப்போது, அவர் போலீஸ் பொது மக்கள் நல்லுறவு சங்கம் என்ற பெயரில் புலனாய்வு செய்தி ஊடகம் நடத்துவதாக கூறி பலரை ஏமாற்றி பணம் பறித்து வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலி பத்திரிகையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஐடி கார்டு, கார் உள்ளிட்டவற்றை பரிமுதல் செய்தனர்.