பத்திரிகையாளர் ஷூ-வை கையில் ஏந்தி வந்த பிரியங்கா காந்தி – வீடியோ

 

பத்திரிகையாளர் ஷூ-வை கையில் ஏந்தி வந்த பிரியங்கா காந்தி – வீடியோ

இந்த பேரணியின் போது, அளவுக்கு அதிமான கூட்டத்தால் எதிர்பாராத விதமாக தடுப்பு ஒன்று திடீரென விழுந்ததில் பத்திரிகையாளர்கள் சிலர் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் அங்கு வந்தது.

நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுருகிறார்.

வயநாடு தொகுதிக்கான வேட்புமனுவை அம்மாவட்ட ஆட்சியர் அஜய்குமாரிடம் ராகுல் நேற்று தாக்கல் செய்தார்.  வேட்புமனு தாக்கலை தொடர்ந்து பேரணியாக  வாகனத்தில் பேரணியாக சென்று ராகுலும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வாக்கு சேகரித்தனர்.

pr

இந்த பேரணியின் போது, அளவுக்கு அதிமான கூட்டத்தால் எதிர்பாராத விதமாக தடுப்பு ஒன்று திடீரென விழுந்ததில் பத்திரிகையாளர்கள் சிலர் காயமடைந்தனர். அதில் ஒருவர் படுகாயமடைந்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவரை மீட்க ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. அப்போது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற ராகுலும், பிரியங்காவும் உதவி செய்தனர்.ஆம்புலன்ஸில் அவரை ஏற்றும் வரை கூடவே இருந்த ராகுலும், பிரியங்காவும் அவரை ஏற்றி விட்ட பின்னரே அங்கிருந்து சென்றனர். அதில் பிரியங்கா காந்தி காயமடைந்தவரின்  ஷூவை தனது கைகளில் எடுத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா காந்தி ஷூவை கையில் ஏந்தி செல்வதை பார்த்த பாதுகாவலர் ஒருவர், அவரிடம் இருந்து அதனை வாங்க முயற்சி செய்ததும் இதில் தெரிய வருகிறது. பிரியங்கா காந்தியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.