பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது சென்னை போலீஸ்

 

பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய டெல்லி விரைந்தது சென்னை போலீஸ்

கொடநாடு கொலை வழக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய சென்னை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது. 

சென்னை: கொடநாடு கொலை வழக்கில் வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூவை கைது செய்ய சென்னை போலீஸ் டெல்லி விரைந்துள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். 

இந்த மர்ம மரணங்களுக்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேல் என்பவரிடம், சயான் என்பவர் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

அந்த வீடியோவை பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் வெளியிட்டதையடுத்து, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியிருக்கிறது. இதற்கிடையே, முதல்வரின் பெயருக்கு மேத்யூ களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக சென்னை குற்றப்பிரிவு போலீசாரிடம், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி புகார் அளித்தார். 

அந்த புகாரை ஏற்று வழக்குப் பதிவு செய்த போலீசார், மேத்யூ சாமுவேல், மற்றும் சயனை கைது செய்ய டெல்லிக்கு விரைந்துள்ளனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்திருப்பதாக தெரிகிறது.