பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிதியுதவி: ஒடிசா முதல்வர் அறிவிப்பு!

 

பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிதியுதவி: ஒடிசா முதல்வர் அறிவிப்பு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டு வருகிறது. 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், இதுவரை 934 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதனால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காப்பீடு அறிவிக்கப்பட்டு வருகிறது. 

ttn

அதே போல பல மாநிலங்களில் ஊடகத்துறையினருக்கும் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பால் பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால்ரூ .15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று  ஒடிஷா மாநில முதல்வா் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் 108 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒடிசா முதல்வர் அதிரடியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

ttn

இது குறித்து பேசிய முதல்வா் நவீன் பட்நாயக், கொரோனா பற்றிய விழுப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகத்துறை கடுமையாக போராடி வருகிறது என்றும் அதற்காக அவர்களுக்கும் காப்பீடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.