பத்திரிகையாளரை தாக்கிய பாஜக உறுப்பினர்கள்: ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டம்

 

பத்திரிகையாளரை தாக்கிய பாஜக உறுப்பினர்கள்: ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டம்

பாஜக உறுப்பினர்கள் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதன் எதிரொலியாக, பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

ராய்பூர்: பாஜக உறுப்பினர்கள் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதன் எதிரொலியாக, பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

சத்தீஸ்கர், ராய்பூர் மாவட்ட பாஜக தலைவர் ராஜீவ் அகர்வாலுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து நூதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சுமன் பாண்டே என்ற பத்திரிகையாளரை ராஜீவ் அகர்வாலும் அவரது தொண்டர்கள் மூவரும் கடந்த சனிக்கிழமை அன்று தாக்கினார்கள். இதற்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில்தான் பத்திரிகையாளர்கள் ஹெல்மெட் அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என இந்த போராட்டத்தின் மூலம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பஹெல், ராஜீவ் அகர்வால் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அதேபோல் பத்திரிகையாளர்களை பாதுகாக்க தனிச் சட்டம் கொண்டு வருவது பற்றி மாநில சட்டப் பேரவையில் விவாதிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

சுமன் பாண்டேவை தாக்கிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். பாஜக உறுப்பினர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தை வீடியோ எடுத்ததற்காக சுமன் பாண்டேவை தாக்கியது குறிப்பிடத்தக்கது.