பத்திரப்பதிவு செய்தவுடன் தானாகவே நடைபெறும் பட்டா மாறுதல்! அரசின் அதிரடி திட்டம்…

 

பத்திரப்பதிவு செய்தவுடன் தானாகவே நடைபெறும் பட்டா மாறுதல்! அரசின் அதிரடி திட்டம்…

இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை ஏனெனில், பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. 

இனி பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகம் செல்ல வேண்டியதில்லை ஏனெனில், பத்திர பதிவு செய்த உடன் தானாகவே பட்டா மாறுதல் நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. 

வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்குதல் விற்றல் செய்ய தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவு செய்யப்படுகிறது. பதிவு முடிந்த உடன் பத்திரப்பதிவு செய்தவர்கள் பட்டாவில் பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படும்.அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல் பெற தாலுகா அலுவலகத்தை அணுக வேண்டும். பட்டா மாறுதல் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல, அங்கு நீண்ட ஆய்வுக்கு பின்னே பட்டா மாறுதல் கிடைக்கும். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

TN
 
பட்டா மாறுதல் செய்ய தாலுகா அலுவலகத்தில் தாமதம் ஏற்படுவதால், இனி வருங்காலங்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ஒரே சர்வே எண்களில் சொத்துக்கள் இருந்தால், பத்திரம் பதிவு செய்தவுடன் தானாக பட்டா மாறுதல் நடைபெறக்கூடிய திட்டத்தை வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளர். இந்த திட்டத்தின் படி, சார்பதிவாளர்கள் சொத்தை பதிவு செய்தவர்கள் அந்த சொத்தில் முழு உரிமை உள்ளவரா, அந்த சொத்துக்களில் வில்லங்கங்கள் இருக்கிறதா, முழு அதிகாரம் அந்த சொத்தில் அவருக்கு உள்ளதா, அவர் மீது வேறு சொத்து உள்ளதா, அதற்கான பட்டா இருக்கிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். இதன் காரணமாக சார்பதிவாளர்களுக்கே கூடுதல் பணி சுமை கூடும் என்றும் பொதுமக்களுக்கு அலைச்சல் இல்லை என்றும் கூறப்படுகிறது.