பத்தாம் வகுப்பு முடிவுகள்: வழக்கம் போல் சாதனை படைத்த மாணவிகள்; பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ் பாடம்!?

 

பத்தாம் வகுப்பு  முடிவுகள்: வழக்கம் போல் சாதனை படைத்த மாணவிகள்; பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ் பாடம்!?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியானது. 

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியானது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் 
எழுதினர். இதில்  38 ஆயிரம் பேர் தனித் தேர்வர்கள் ஆவர்.  இந்த தேர்வானது  கடந்த மார்ச் 14-தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது.

exam

இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன.இதில் 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவிகித பேரும், மாணவிகள் 97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல் மாணவர்களைவிட மாணவிகள் 3.7 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

exam

திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.53 சதவீதம் பேரும், அதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 98.48 சதவீதம் பேரும், நாமக்கல் மாவட்டத்தில் 98.45 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பாடவாரியாக தமிழில் 96.12 சதவீதமும்   ஆங்கிலத்தில்  97.35  சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் கணித பாடத்தில்  96.46 சதவீதம் , அறிவியல்- 98.56 சதவீதம் , சமூக அறிவியல்- 97.07சதவீதமும்  வெற்றி பெற்றுள்ளனர். இதில் தமிழ் பாடத்தில் தான் குறைவான தேர்ச்சி என்பது கவனிக்கத்தக்கது. 

exam

தேர்வு முடிவுகள் மாணவர்கள் ஏற்கனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக  அனுப்பப்பட்டுள்ளது. மேலும், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளலாம்

மேலும் சிபிஎஸ்இ 12, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 3, 4-வது வாரங்களில் வெளியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.