பத்தவச்சான் பரட்டை… ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்!

 

பத்தவச்சான் பரட்டை… ரஜினிகாந்தை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார்!

பத்தவச்சான் பரட்டை என்பது போல் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கருத்து கூறியிருக்கிறார். அது தற்போது பற்றிக்கொண்டு எரிகிறது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது. 

துக்ளக் 50வது ஆண்டு நிறைவு விழாவில் முரசொலி பத்திரிகை வைத்திருந்தால் அவர் தி.முக என்று கூறியிருக்கலாம். ஆனால், துக்ளக் பத்திரிகை வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை நடத்தினார் என பேசினார். அதுமட்டுமின்றி ராமர் படத்தை பெரியார் செருப்பைக்கொண்டு சேதப்படுத்தியதாகவும் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு காவல்நிலையங்களில் ரஜினி மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. 

Jayakumar

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், “பத்தவச்சான் பரட்டை என்பது போல் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கருத்து கூறியிருக்கிறார். அது தற்போது பற்றிக்கொண்டு எரிகிறது. அவர் அந்த கருத்தை தவிர்த்திருக்கலாம், அவர் பழமையை பேசி பின்னுக்கு செல்லாமல் இருக்க வேண்டும். மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். மாநில அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது” என தெரிவித்தார்.