“பதுக்குறான்.. பதுக்குறான் காய்கறியை பதுக்குறான்”: திருநெல்வேலி மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ!

 

“பதுக்குறான்.. பதுக்குறான் காய்கறியை பதுக்குறான்”: திருநெல்வேலி மாநகர காவல்துறையின் விழிப்புணர்வு வீடியோ!

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏழை எளிய மக்களும், தினக்கூலி பெறும் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் தமிழக அரசு ரூ.1000 பணமும், ரேஷன் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கியது. ஊரடங்கு அமல்படுத்தப் பட்டிருப்பினும் கொரோனா அதிகமாக பரவி வருவதால், தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது என்றும் தற்போது இருக்கும் அனைத்து கட்டப்பாடுகளும் 31 ஆம் தேதி வரை தொடரும் என்றும் அறிவித்தார்.

ttn

மேலும், இன்று காலை மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு பிறகு, கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். 

 

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தை சமாளிக்க பல மக்கள் தேவையான பொருட்களை வாங்கிக் குவித்த வண்ணம் இருக்கின்றனர். அதனால் அளவுக்கு அதிகமாக பொருட்களை வாங்கி குவிக்க வேண்டாம் என திருநெல்வேலி மாநகர காவல்துறை விழுப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.