‘பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்’ : ராமதாஸ் விமர்சனம்!

 

‘பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம்’ : ராமதாஸ் விமர்சனம்!

பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குப்  பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சாமானிய மக்கள் முதல் நீதிமன்றம் வரை இந்த பேனர் கலாச்சாரத்தைக்  கடுமையாகச் சாடி வருகின்றனர். 

subha

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,   ‘பதாகைகள் இல்லாத விழாக்கள் தான் அரசியல் முதிர்ச்சியின் அடையாளம் ஆகும். பதாகைகள் தவிர்ப்போம்… நாகரிகம் காப்போம். பதாகைகள் அமைத்தவர்களுக்கு அபராதம் விதித்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமே இப்படி கூறும் உரிமை உண்டு! பாமக நிகழ்ச்சிகளில் பதாகைகள்,கட் அவுட்களுக்கு  இடம் கிடையாது.தூத்துக்குடியில்  பாமக நிகழ்ச்சிக்காக என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகு தான் விழாவில் பங்கேற்றேன்.புதுவையில் வைக்கப்பட்ட பதாகைகளை அகற்றியதுடன், வைத்தவர்களுக்கு அபராதமும் விதித்தேன்.’ என்றும் நினைவு கூர்ந்துள்ளார்.

மேலும், ‘ பாட்டாளி மக்கள் கட்சியின் நிகழ்ச்சிகளுக்குப் பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணை இன்றும், என்றும்  பா.ம.க. நிர்வாகிகளால் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.  இந்த விதியை மீறுவது குறித்து பா.ம.கவினர் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது’ என்று எச்சரிக்கை தொனியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.