பதவி, கெளரவம் தொடர்ந்து கிடைக்க ‘ஜேஷ்டாபிஷேகம்’!

பதவி, கெளரவம் தொடர்ந்து கிடைக்க ‘ஜேஷ்டாபிஷேகம்’!

தமிழ் மாதங்களில் நீண்ட நாட்களைக் கொண்ட மாதம் ஆனி மாதம் தான். பிற மாதங்களில் இல்லாதபடி, ஆனி மாதத்தில் 32 நாட்களைக் காணலாம். அதனால் தான் வடமொழியில் ஆனி மாதத்தை ஜேஷ்ட மாதம் என்று அழைக்கிறார்கள். ஜேஷ்டா  என்றால் மூத்த அல்லது பெரிய என்று பொருள். சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ‘மிதுன மாதம்’ என்றும் அழைப்பர். 

god

உத்தராயணக் காலத்தின் கடைசி மாதமும் ஆனி மாதம் தான். சூரியன் வடதிசையில் பயணிப்பதை தான் உத்தராயணக் காலம் என்கிறோம்.  மிதுன ராசி பெரிய ராசி என்பதால் இதனைக் கடக்க சூரியனுக்கு கூடுதல்  நேரம் தேவைப்படுகிறது. அதனால் இந்த ஆனி மாதத்தில் தான் வருடத்தின் நீண்ட பகல் பொழுது இருக்கும். சூரியன் இந்த மாதத்தில் தான் ஓவர் டைம் பார்க்கிறார் என்று வைத்துக் கொள்ளலாம். 

god

சரி.. இதற்கும் ஜோஷ்டாபிஷேகத்திற்கும் என்ன சம்மந்தம்?

ஜேஷ்ட மாதம் என அழைக்கப்படுகிற இந்த ஆனி மாதத்தின்  கேட்டை நட்சத்திர நாளில் ‘ஜேஷ்டாபிஷேகம்’  விழா ஆலயங்களில் வெகு சிறப்பாக நடைபெறும்.  குறிப்பாக பழனியில் ஜேஷ்டாபிஷேகம்  ரொம்ப பிரபலம். கேட்டை நட்சத்திரத்தை ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் சொல்வர். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய தேவதை  இந்திரன்.  தேவர்களின் ஜேஷ்டனான, அதாவது, மூத்தவனான, தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற இந்திரன் தனது தலைமைப் பொறுப்பினை  தக்க வைத்துக் கொள்ளவும், புதிய சக்திகளைப் பெறவும், இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் விசேஷ  அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுகின்ற நாள் தான், ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாள்.

god

ஆனி மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில், உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெரிய நிர்வாகத்தைக் கட்டி ஆளும் தொழில் அதிபர்கள் என பதவி சுகம் கண்டு வருபவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்து வழிப்பட்டால், பதவி நிலைக்கும்.