பதவி உயர்வை தரும் சொர்ணாகர்ஷண பைரவர்!

 

பதவி உயர்வை தரும் சொர்ணாகர்ஷண பைரவர்!

தேய்பிறை அஷ்டமி விரத பைரவ வழிபாடு எத்தகைய பலன்களை தரும் என்பதினை பற்றி விரிவாக பார்போம்.

அஷ்டமி என்பது மொத்தமுள்ள பதினைந்து திதிகளில் எட்டாவது திதியாக வருவது அஷ்டமி திதியாகும்  அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி மிகவும் விசேஷமானதாகும். அஷ்டமி விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

bhairavar

பைரவர் என்றால் பயமில்லாதவர் மற்றும் பக்தர்களின் பாவத்தை நீக்குபவர் என்றும் பொருள். ஜனன ஜாதகத்தில் அமைந்துள்ள அனைத்து கிரக தோஷங்களையும் நிவர்த்தி செய்வது  பைரவர் வழிபாடாகும்.

பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கியுள்ளது என்பது நம்பிக்கையாகும். பைரவர் மும்மூர்த்தி ஸ்வரூபமானவர் என்று வேதங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் மேன்மை பெறலாம். 

bhairavar

தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில்பைரவருக்கு செவ்வரளி மலர்கள் அர்ச்சனை செய்வதும் வடைமாலை சார்த்தியும் மிளகு அல்லது தயிர் சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்வதும் வீட்டில் உள்ள தரித்திர நிலையினை விலக்கும். 

கடன் தொல்லையில் வாடுபவர்கள் இந்நாளில் ராகு கால வழிபாடு செய்வது மிகுந்த மேன்மையான பலன்களை தரும்.தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். 

bhairavar

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை தருகின்ற ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களை தரும்.

அஷ்டமி திதியில் மற்றும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிஷம், நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும் என்று பல்வேறு ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.