பதவியை தக்க வைத்த எடியூரப்பா: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!

 

பதவியை தக்க வைத்த  எடியூரப்பா: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா!

எடியூரப்பா பதவியை தக்கவைத்ததை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

கர்நாடகா: எடியூரப்பா பதவியை தக்கவைத்ததை தொடர்ந்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

kumarasamy

கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்தது. இதையடுத்து கர்நாடகாவின்  எதிர்க்கட்சி தலைவர்  எடியூரப்பா புதிய முதல்வராக கடந்த 26ஆம் தேதி  பதவியேற்றார். இருப்பினும் போதிய  பெரும்பான்மை இல்லாமல் எடியூரப்பா பதவியேற்றார் என்ற சலசலப்பு ஏற்பட்டது. 

yed

இதை தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு  கர்நாடக சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. இதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஆதரவைக் குரல் வாக்கெடுப்பு மூலம் பதிவு செய்தனர். இதனால்  பெரும்பான்மையை நிரூபித்து பதவியை எடியூரப்பா தக்கவைத்தார். 

ramesh

இந்நிலையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபாநாயகரான ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.