பதவியேற்ற அடுத்த நாளே தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடி!

பதவியேற்ற அடுத்த நாளே தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடி!

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்தது. இருப்பினும் மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து, பெரும் வெற்றி பெற்றது பா.ஜ.க. இதனால் இரண்டாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றார் நரேந்திர மோடி. இதையடுத்து நேற்று பிரதமராக மோடியும், அவருடன் 58 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் பதவியேற்ற மறுநாளே தமிழகத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும், எரிச்சலிலும் தமிழ்நாட்டிலிருந்து ஒருவருக்கு கூட மத்திய அமைச்சர் பதவிகொடுக்காமல் பிரதமர் தண்டித்தார். அதுமட்டுமின்றி பதவியேற்ற அடுத்த நாளே சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்து பழித்தீர்த்து வருகிறது. 

பதவியேற்று கையெழுத்திட்ட பேனாவின் மை காய்வதற்குள் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பச்சைத் துரோகம் செய்ய மத்திய பா.ஜ.க. அரசு துடிப்பதையும், அ.தி.மு.க அரசு அதற்கு சரணாகதி அடைந்து நின்று – தூபம் போடுவதையும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது என திமுக தலைவர் ஸ்டாலினும் இந்த செயலுக்கு கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.