பதவியேற்பு விழா: மோடியை அழைத்த உத்தவ் தாக்கரே! 

பதவியேற்பு விழா: மோடியை அழைத்த உத்தவ் தாக்கரே! 

மகாராஷ்டிரா முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று மாலை பதவியேற்க உள்ளார். விழாவில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்புவிடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி சிவசேனாவுக்குத் தர வேண்டும் என்று பா.ஜ.க-விடம் உத்தவ் தாக்கரே நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா – சிவசேனா கூட்டணிதான் அமோக வெற்றி பெற்றது. ஆனால், பாரதிய ஜனதாவால் தனித்து ஆட்சி  அமைக்க முடியாதநிலையில் தன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆதரவு தர முடியும் என்ற சிவசேனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

shiv sena

இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணையோடு பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தது. பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ஃபட்னாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத் தொடர்ந்து சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி சார்பில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்க உள்ளார். பழைய பகையை மறந்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே அழைப்புவிடுத்துள்ளார். அதேபோல், உத்தவ் தாக்கரே சார்பில் அவரது மகன் ஆதித்யா தாக்கரே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

modi and uttak

இருப்பினும் உடல்நிலை காரணமாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ராகுல் காந்தியும் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. 
இந்த விழாவில் பங்கேற்கும்படி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 
இன்று மாலை நடைபெறும் விழாவில் உத்தவ் தாக்கரே உடன் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவியும் காங்கிரஸ் கட்சிக்கு சபாநாயகர் பதவியும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப்ரஃபுல் பட்டேல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.