பதவிக்காகவே சிலர் திமுக பக்கம் செல்கின்றனர்- டிடிவி தினகரன்

 

பதவிக்காகவே சிலர் திமுக பக்கம் செல்கின்றனர்- டிடிவி தினகரன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருப்பதால் பதவிக்காக சிலர் அங்கு சென்றுகொண்டிருகின்றனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருப்பதால் பதவிக்காக சிலர் அங்கு சென்றுகொண்டிருகின்றனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

மதுரை செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,  “தேனியில் உள்ள நிர்வாகிகள் என்னை சந்திக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்கள், புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்ந்தெடுப்பதற்காக மதுரையில்  ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. திமுகவிற்கு நிர்வாகிகள் செல்வதால் எந்த ஒரு பாதிப்பும் எங்கள் கட்சிக்கு இல்லை. உண்மையான தொண்டர்கள் என்றும் எங்கள் பக்கம் இருப்பார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் 90 சதவீதத்திற்கும் மேல் இங்கு வந்துள்ளனர். அவர்கள் என்னுடன் தான் உள்ளனர். நிர்வாகிகள் செல்வதால்  கட்சியின் பலம் குறையும் என்று நான் நினைக்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் தண்ணீர் இல்லையென்றால் உடனே கொடுப்பார்கள். ஆனால் மக்களுக்கு தண்ணீர் இல்லையென்றால் கொடுக்க மாட்டார்கள்.போர்க்கால அடிப்படையில்  தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை மறைப்பதற்காகத்தான் தங்கதமிழ்செல்வன் திமுக சென்றதை அனைவரும் பூதாகரமாக பேசி வருகின்றனர். பலமுறை அவரை நான் தவறாக பேச வேண்டாம் என்றும், அறிவுறுத்தி வந்தேன். ஆனால் தொடர்ந்து அவர் ஒரு வருடத்திற்கும் மேலாக பேட்டி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். திமுக அதிக தொகுதிகளில் வென்று இருப்பதால் பதவிக்காகவே சில அங்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

கருணாநிதி, அண்ணா, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் காலத்திலேயே கட்சி தாவும் முறை நடந்திருக்கிறது. அவர்  திமுகவுக்கு செல்ல முடிவெடுத்த பின்பு அவருடைய செயல்பாடுகள் மாறி வந்தன. கடந்த 20ஆம் தேதி அவரை அழைத்து இந்த மாதிரி எல்லாம் பேட்டி கொடுக்க கூடாது தொடர்ந்து இப்படி நீங்கள் செய்து வந்தால் உங்களை பொறுப்பிலிருந்து நான் நீக்கி விடுவேன் என்று அறிவித்து இருந்தேன். அப்போது சரி சரி என்று சொல்லிவிட்டு அடுத்தடுத்து அவர் ஒவ்வொரு ஊடகத்திற்கும் தொடர்ந்து தவறாக பேட்டி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார். எதற்காக அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வந்தார் என்று எங்களுக்கு தெரியவில்லை, அவர் அதிமுகவில் இருந்து இருக்கலாம் ஏன்? எதற்காக வந்தார் என்று எங்களுக்கும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தெரியவில்லை.

கடந்த 6 மாதமாக தங்கதமிழ்ச்செல்வன் நடவடிக்கை, செயல்பாடுகள் சரியில்லை. செந்தில் பாலாஜி அறிவுறுத்தலின் பேரில்தான் தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். அவருக்கு அங்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் தங்கத்தமிழ்ச்செல்வன் சொல்ல நினைத்திருந்தார். ஓபிஎஸ் அதிமுகவில் இணைவதற்கு இடையூறாக இருந்ததால், திமுகவில் இணைந்து இருக்கிறார்” என்று கூறினார்.