பதற்றத்தில் எடப்பாடி- ஓ.பி.எஸ்… அதிமுகவில் வெடிக்கப்போகும் அதிரடி பூகம்பம்..!

 

பதற்றத்தில் எடப்பாடி- ஓ.பி.எஸ்…  அதிமுகவில் வெடிக்கப்போகும் அதிரடி பூகம்பம்..!

பொதுக்குழுவோ, செயற்குழுவோ நடக்கும்போது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.

பாஜகவை எதிர்த்து கோஷமிட்டவர்களுக்கு அதிமுகவில் ராஜ்ய சபா சீட் கொடுக்கவில்லை. ராஜ்ய சபாவில் கோஷமிட்டு கேள்வி எழுப்பி பாஜகவை சங்கடத்தில் ஆழ்த்தியவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் காரணமாக ஏற்கனவே இருந்தவர்களுக்கு சீட் வழங்கப்படவில்லை. இரண்டாவது விஷயம் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் முற்றிலும் ஒதுக்கப்பட்டு இருக்கிறார்கள். anwar

மூன்றாவது விஷயம் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவருக்கு சீட் கொடுத்து இருக்கிறார்கள். நான்காவது தன் மாவட்டத்துக்கான பிரதிநிதித்துவத்தை எடப்பாடி சரியாக கடைபிடித்து இருக்கிறார். ராஜ்ய சபா தேர்தல் அளவில் நடந்த விஷயங்கள் இதுதான். Edappadi

தம்பிதுரை ஸ்லீப்பர்செல்களில் முதல் வரிசையில் இருப்பவர். அப்புறம் மைத்ரேயனுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் -ஈ.பி.எஸ்  இரண்டு பேரும் சேர்ந்து எடுத்த முடிவுதான். அரசியல் குழப்பம் நிலவும் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் கொடுத்தால் ஏற்கனவே நான்கு ஐந்தாக இருக்கும் கோஷ்டி இன்னும் வெடித்துச் சிதறும். தென் மாவட்டங்களிலும் கோஷ்டி மோதல் நிலவுவதால் யாருக்காவது சீட் கொடுத்து பிறகு அதிமுக இருந்ததற்கான  அறிகுறியே தெரியாமல் போய் விடும் என்ற பயத்தில் தென் மாவட்டங்களையே அதிமுக  முற்றிலும் ஒதுக்கி வைத்துவிட்டது.OPS

ராமநாதபுரத்துக்காரர்  அன்வர் ராஜா மகன் ஆகியோர் சீட் கேட்க சத்தமே இல்லாமல் சிறுபான்மையினத்தை சேர்ந்த ஒருவருக்கு லக் அடித்து இருக்கிறது. இது சீனியர்கள் பலரின் வயிற்று எரிச்சலை கிளப்பி இருக்கிறதாம். இதனால், பொதுக்குழுவோ, செயற்குழுவோ நடக்கும்போது பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.