பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு பாதிப்புதான்: உறுதிப்படுத்திய அமெரிக்க அமைப்பின் ஆய்வு

 

பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவிற்கு பாதிப்புதான்: உறுதிப்படுத்திய அமெரிக்க அமைப்பின் ஆய்வு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாஷிங்டன்: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ஊழலை ஒழிக்கிறேன் என்ற பேரில் புழக்கத்தில் இருந்த ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது எனக்கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செய்தார். அவரது செயலுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நடவடிக்கையால் நாட்டிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறினர். ஆனால் இந்தியாவிற்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து அமெரிக்காவை சேர்ந்த தேசிய பொருளாதார ஆராய்ச்சி அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தி அதுகுறித்த கட்டுரையை வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரையில், 2016 நவம்பரில் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு திட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதித்து விட்டது. அன்றைய கால கட்டத்தில் சுமார் 2% வளர்ச்சியை பண மதிப்பிழப்பு பாதித்து இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதும் நவம்பர் மாதமும், டிசம்பர் மாதமும் 3% வரை பாதிப்பு இருந்தது. அதன் பிறகு பல மாதங்கள் இதன் தாக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டன. 2017 கோடை காலத்தில் நாட்டில் பொருளாதார ரீதியாக மோசமான நிலை இருந்தது என ஏராளமான் தகவல்கள் கூறப்பட்டுள்ளது.