பண்டிகை காலத்தில் டிக்கெட் விலை உயர்வை தடுக்க பயணகட்டணங்களுக்கு உச்சவரம்பு- ரயில்வே தகவல்

 

பண்டிகை காலத்தில் டிக்கெட் விலை உயர்வை தடுக்க பயணகட்டணங்களுக்கு உச்சவரம்பு- ரயில்வே தகவல்

தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க அனுமதிப்பதற்கு முன்பாக, பண்டிகை காலத்தில் டிக்கெட் விலை திடீரென உயர்வதை தவிர்க்க பயணகட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

நம் நாட்டை பொறுத்தவரை சாமானிய மனிதனுக்கு ரயில் போக்குவரத்து மிகப்பெரிய வரபிரசாதம். குறைந்த செலவில் நீண்ட தூர பயணங்கள் செல்ல நடுத்தர மக்கள் முதலில் தேர்ந்தெடுப்பது ரயில் போக்குவரத்தைதான். ரயில் போக்குவரத்து தற்போதைக்கு அரசின் வசம் உள்ளது. இந்நிலையில், ரயில் போக்குவரத்தை தனியாருக்கு திறந்தவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

ரயில்

ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ் முன்னணி செய்தி நிறுவனத்தின் கேள்விகளுக்கு பதில் கூறியதாவது: ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுப்பதற்கு இன்னும் கொஞ்சநாள் ஆகும். கட்டணம் நிர்ணயம், வழித்தடம் ஒதுக்கீடு மற்றும் பாதுகாப்பு விஷயங்களுக்காக நாங்கள் ஒரு கட்டுப்பாட்டாளரை நியமிப்போம். வெளிப்படையான ஏலமுறையில் ரயில்கள் மற்றும் வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். பல தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

ரயில்வே தனது டிக்கெட் மற்றும் கேட்டரிங் பிரிவு ஐஆர்சிடிசிக்கு 2 தேஜாஸ் ரயில்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி-லக்னோ, அகமதாபாத்-மும்பை ஆகிய வழித்தடங்களில் தேஜாஸ் ரயில்களை ஐஆர்சிடிசி இயக்க உள்ளது. அக்டோபர் 15ம் தேதி முதல் டெல்லி-லக்னோ இடையே தேஜாஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. நாங்கள் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் கொடுப்போம். உணவு மற்றும் குளிர்பானங்கள் என பலதர வசதிகளை அவர்களால் பயணிகளுக்கு கொடுக்க முடியும்.

தேஜாஸ் ரயில்

தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க அனுமதிப்பதற்கு முன்பாக, பண்டிகை காலத்தில் டிக்கெட் விலை திடீரென உயர்வதை தவிர்க்க பயணகட்டணங்களுக்கு உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.