பண்டிகை காலத்தில் குறைந்த வட்டியில் வாகன மற்றும் வீட்டுக் கடன்கள்.. ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு..

 

பண்டிகை காலத்தில் குறைந்த வட்டியில் வாகன மற்றும் வீட்டுக் கடன்கள்.. ஸ்டேட் வங்கி அதிரடி அறிவிப்பு..

பண்டிகை காலத்தில் குறைந்த வட்டியில் வாகன மற்றும் வீட்டுக் கடன்கள் வழங்கப்படும் என ஸ்டேட் வங்கி அதிரடியாக அறிவித்துள்ளது.

பொருளாதார மந்த நிலை, பணப்புழக்கம் குறைந்தது போன்ற காரணங்களால் வங்கிகளில் கடன் வாங்க பெரும்பாலான மக்கள் தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். அதேசமயம் வங்கிகள் வழங்கும் கடன் வளர்ச்சியும் மிகவும் குறைவாக உள்ளது.

வீட்டுக் கடன்

இந்நிலையில் நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி பண்டிகை காலத்தில் வாகனம் மற்றும் வீட்டு கடன்களை அதிகரிக்கும் நோக்கில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பண்டிகை காலத்தில் வீடு மற்றும் வாகன கடன்கள் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். 

வாகன கடன்

மேலும் கார் கடன்களுக்கு பிராசிங் கட்டணம் கிடையாது. வாடிக்கையாளர்கள் யோனோ அல்லது வெப்சைட் வாயிலாக கார் லோன் வேண்டினால் வட்டி விகிதத்தில் 0.25  சதவீதம் சலுகை கிடைக்கும். மாத சம்பளதார வாடிக்கையாளர்களுக்கு, காரின் சாலை விலையில் 90 சதவீதம் வரை கடன் கிடைக்கும் என ஸ்டேட் வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேசமயம், பண்டிகை கால சலுகை எப்போது ஆரம்பிக்கும், முடியும் என்பது குறித்த தகவலை ஸ்டேட் வங்கி குறிப்பிடவில்லை. ஸ்டேட் வங்கி அண்மையில் கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்தது குறிப்பிடத்தக்கது.