பணி நிமித்தமாக வெளியே சென்றவரை தாக்கிவிட்டு மன்னிப்பு கேட்ட போலீஸ்!

 

பணி நிமித்தமாக வெளியே சென்றவரை தாக்கிவிட்டு மன்னிப்பு கேட்ட போலீஸ்!

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டை வெளியே வந்தால் போலீசார் சரமாரியாக தாக்கி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டை வெளியே வந்தால் போலீசார் சரமாரியாக தாக்கி வருகின்றனர். அதே போல, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர், பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் போது, வாகன சோதனையில் ஈடுட்டிருந்த காவலர் சத்யா அவரை லத்தியால் அடித்துள்ளார். இதனால் அவர்கள் இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக, காவலர் சத்யாவுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்ததாக கூறப்படுகிறது. 

ttn

இந்நிலையில் மூர்த்தியும் காவலர் சத்யாவும் இணைந்து தற்போது வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், காவலர் சத்யா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன் பிறகு மூர்த்தி, சத்யாவும் நானும்  நண்பர்கள் தான். நண்பன் என்று கூட பாராமல் ஊரடங்கு உத்தரவை மீறியதால் அவர் என்னை அடித்தார். இது காவலர்களின் கடமை. நமக்காக தான் மருத்துவர்கள், காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. எனவே இதனை பெரிது படுத்தாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவோம். என்று கூறியுள்ளார்.