பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து காவலர் மரணம்!

 

பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து காவலர் மரணம்!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது.

death

தினமும் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும் சாலைகளில் வீணாக சுற்றிக் கொண்டிருப்பவர்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பும் பணியிலும் விதிமுறையை மீறுபவர்களை தண்டிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் பணியாற்றிவரும் அருன்காந்தி(33) என்ற போக்குவரத்து காவலர் இன்று மதியம் சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அருகில் இருந்த காவலர்கள் போலீஸ் வாகனம் மூலம் அருனை அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.