பணியாளர்களை கொத்தடிமையாக பயன்படுத்திய அரிசி ஆலை நிறுவனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பணியாளர்களை கொத்தடிமையாக பயன்படுத்திய அரிசி ஆலை நிறுவனருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

பணியாளர்களை கொத்தடிமைகளாக துன்புறுத்திய வழக்கில் அரிசி ஆலை அதிபர் செல்வகுமாருக்கு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காஞ்சிபுரம் திருக்கழுக்குன்றத்தில் ₹ 3 ஆயிரம் கூலி கொடுத்து கொத்தடிமைகளாக துன்புறுத்தி வந்ததாக திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியரால் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 குழந்தைகள் மீட்கப்பட்டனர். உரிமையாளர் முருகேசன், அவரது மகன் செல்வகுமார் ஆகியோர் கைதான வழக்கில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம், முருகேசன் இறந்துவிட்டதால் செல்வகுமார் மீதான வழக்கை மட்டும் விசாரித்தது. அவரை விடுதலை செய்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் மஞ்சுளா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கில் கொத்தடிமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அரிசி ஆலை அதிபர் செல்வகுமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கவும் செல்வகுமாருக்கு நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.