பணிபுரியும் பெண்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்

 

பணிபுரியும் பெண்களுக்கான ஃபிட்னஸ் டிப்ஸ்

பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலத்தைப் பற்றி அதிகம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் அலுவலக வேலைகளைச் செய்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது.

பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் உடல்நலத்தைப் பற்றி அதிகம் கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு வீட்டில் உள்ள வேலைகளைச் செய்வதற்கும் அலுவலக வேலைகளைச் செய்வதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. இன்றைய பரபரப்பான சூழலில் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் சில குறிப்புகளை பற்றி பார்க்கலாம்.

காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள்!

இரவு முழுதும் தூங்கிவிட்டு பட்டினியாக இருந்து, காலை ஏழுந்ததும் சாப்பிடுவது காலை உணவுதான். அது அந்த நாளுக்கான ஆற்றலை அளிக்கிறது. முழு தானியங்கள், பால் பொருள்கள், புரதங்கள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை காலையில் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பு

நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சியுங்கள். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சற்று நடந்துவிட்டு பின் வேலையை தொடரலாம். ஃபோன் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம், மதிய உணவிற்குப் பிறகு சிறிது நடந்துவிட்டு பணியை தொடரலாம்.

ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்  

அவ்வபோது சிறுக சிறுக ஏதேனும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது, நாள் முழுதும் உங்களை ஆற்றலுடன் வைத்திருக்க உதவும். அதுமட்டுமின்றி ஏதேனும் சாப்பிட வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தும். ஆகவே, அலுவலகத்திலும் வீட்டிலும் ஆரோக்கியமான நொறுக்குத்தீனி வகைகளை வாங்கி வைத்துக்கொள்ளலாம். நட்ஸ், வேர்க்கடலை, உலர் பழங்கள் போன்றவற்றை டீ பிரேக்கில் சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். உங்கள் வசதிக்கேற்ப உடற்பயிற்சி நேரத்தைப் பிரித்துத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். காலையில் ரன்னிங் ஓடலாம், 10 நிமிடம் பாடி கண்டிஷனிங் எக்ஸர்சைஸ் செய்யலாம். அல்லது வேலைக்கு சென்று வந்த பிறகு வெயிட் ட்ரெயினிங் செய்யலாம்.

சரியான நேரத்தில் நல்ல உறக்கம்

நாள் முழுவதும் சுறுச்சுறுப்பாக இயங்கும் உங்களுக்கு ஓய்வு தேவை. அடுத்த நாளும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக துவங்க தூக்கம் மிகவும் அவசியம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்குத் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். சுமார் 7-8 மணி நேரம் நன்கு தூங்க வேண்டும். சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வதைத் தவிர்க்கவும், படுக்கச் செல்லும் முன்பு தொலைக்காட்சி அல்லது மொபைல் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர்க்கவும்.