பணம் மதிப்பிழப்பு: கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

 

பணம் மதிப்பிழப்பு: கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் இன்று போராட்டம்

பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்

டெல்லி: பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பணம் மதிப்பிழக்கத்தின் இரண்டாம் ஆண்டு தினத்தை நாட்டின் கருப்பு தினமாக அனுசரித்து அக்கட்சியினர் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இன்று போராட்டம் நடத்தவுள்ளனர்.

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.