பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்: டிடிவி தினகரன் விமர்சனம்

 

பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர்: டிடிவி தினகரன் விமர்சனம்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பணம் கொடுத்து ஆட்களை அழைத்து செல்கின்றனர் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர்  டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழககத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுகவில் உயிரோட்டமான தொண்டர்கள் இல்லை. அத்தொண்டர்கள் அமமுகவிற்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

பணம் கொடுத்து எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஆட்களை வாகனத்தில் அழைத்துசென்று தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக காட்ட முயற்சிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது.
 
அரசு நிகழ்ச்சி வழக்கப்படி அழைப்பிதழில் சட்டமன்ற உறுப்பினரான தன் பெயரை சேர்த்துள்ளனர். ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை என்றார்.