“பணமா கேக்கறிங்க இந்தா உதை வாங்கிக்கங்க “காசு கேட்ட டிரைவர் ,போலீசுக்கு  அடி கொடுத்த பெண்-

“பணமா கேக்கறிங்க இந்தா உதை வாங்கிக்கங்க “காசு கேட்ட டிரைவர் ,போலீசுக்கு  அடி கொடுத்த பெண்-

அந்தப் பெண் உறுதியுடன் கட்டணம் செலுத்தாமல்  இருந்தபின், டிரைவர் ராமன் உதவிக்காக காவல்துறையை அழைத்தார். அப்போது ஸ்டேஷனின் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற  ரயில்வே போலீசான இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் அந்த இடத்தை அடைந்தனர். அவர்களுடனும் அப்பெண் வாக்குவாதம் செய்து அவர்களையும் தாக்கினார்.

சனிக்கிழமை, 33 வயதான பெண் ஒரு டாக்ஸியில் சண்டிகர் ரயில் நிலையத்திற்கு வந்தார். டாக்சி ட்ரைவர் கட்டணம் செலுத்தும்படி கேட்கப்பட்டதும், அந்த பெண் மறுத்து, ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்யத் தொடங்கினார்.
அந்தப் பெண் உறுதியுடன் கட்டணம் செலுத்தாமல்  இருந்தபின், டிரைவர் ராமன் உதவிக்காக காவல்துறையை அழைத்தார். அப்போது ஸ்டேஷனின் வாகன நிறுத்துமிடத்தில் நின்ற  ரயில்வே போலீசான இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் அந்த இடத்தை அடைந்தனர். அவர்களுடனும் அப்பெண் வாக்குவாதம் செய்து அவர்களையும் தாக்கினார்.

taxi

இரண்டு கான்ஸ்டபிள்கள் தாக்கப்பட்ட பின்னர், மேலும் இரண்டு போலீசார் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 33 வயதான லலிதா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அவர் ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இந்த வழக்கை நன்கு அறிந்த ஒரு போலீஸ் அதிகாரி, “லலிதா வாடகை வண்டியில் பயணம் செய்து வந்து பணம் தராமல் தகராறு செய்தார் அவர் திருமணமாகிவிட்டார், ஆனால் அவரது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக இருக்கிறார். அவரது பொருட்களையும்  நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்.”என்றார் .