பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடூரமான பயங்கரவாத தாக்குதல் – ராகுல்காந்தி! 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொடூரமான பயங்கரவாத தாக்குதல் – ராகுல்காந்தி! 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இன்றுடன் மூன்றாகிவிட்ட நிலையில் இந்த நடவடிக்கையால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதே மிச்சம் என பொருளாதார நிபுணர்கள் பாஜக அரசை வசைப்பாடி வருகின்றனர். 

Rahul gandhi

இந்நிலையில் ராகுல்காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தை பேரழிவிற்குள்ளாக்கியது. இது ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். பல உயிர்களை எடுத்தது, லட்சக்கணக்கான சிறு வணிகர்களை நஷ்டமடைய செய்தது மற்றும் மில்லியன் கணக்கான இந்தியர்களை வேலையில்லாமல் திண்டாட வைத்தது. இதெற்கெல்லாம். ஒரு நாள் நீதி வேண்டும்” என தெரிவித்தார்.