பணமதிப்பிழப்பு நடவடிக்கை; காங்கிரஸ் புதுக் குண்டு!

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை; காங்கிரஸ் புதுக் குண்டு!

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

புதுதில்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது #DeMonetisation என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது.

Demonetisation

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்ளிடோரிடம் இருந்த ரொக்கப் பணம், விமானங்கள் மூலம் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டு 35-40 சதவீதம் கமிஷன் தொகை பெறப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.

amit shah

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ள அவர், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தலைமயிலான அனைத்து துறையின் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு, இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய சரித்திரத்தில் மிக பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை. தற்போது ஊழலை விசாரிக்க கிளம்பி உள்ள அமைப்புக்களும் அதிகாரிகளும் ஆட்சியில் உள்ளவர்கள் மீது விசாரணை செய்வதே இல்லை. இதைப் போல் பல வீடியோக்கள் உள்ளன. ஆனாலும் அரசு மீது விசாரணை நடத்த எந்த அமைப்பும் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.

Election commission

ஆளும்கட்சியின் நடவடிக்கை குறித்து பல முறை தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் அளித்துள்ளோம். ஆனால், தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் குற்றங்களை கண்டு கொள்வதில்லை. இந்த சமயத்தில் நீதிமன்றத்தையும் அணுக முடியவில்லை எனவும் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, வருமான வரித்துறை சோதனை அரசியல் காரணங்களுகாக நடைபெறுகிறது என கூற முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதையும் வாசிங்க

கலவரத்தைத் தூண்ட விடுதலை சிறுத்தைகள் சதி; ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு!