பணநிலைமை யாருக்கெல்லாம் சரியாகும்?

 

பணநிலைமை யாருக்கெல்லாம் சரியாகும்?

மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது, கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது.

இன்றைய ராசிபலன்  11-07-2019 (வியாழன்)

மேஷம் 
மனைவியின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள், அவரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனே புறக்கணியுங்கள்.  வேலையில் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். 
அதிர்ஷ்ட எண்: 1

ரிஷபம் 
இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். நண்பர்களும் உறவினர்களும் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார்கள். உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் என்பதால் பலன் தரக் கூடிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 1
மிதுனம் 
இன்று செலவுகள் அதிகரிக்கும். உங்களின் பிடிவாதமான குணத்தால் பெற்றோரின் அமைதி கெடும். எல்லோரையும் வருத்தம் அடையச் செய்யாதிருக்க பணிவாக இருப்பது நல்லது. 
அதிர்ஷ்ட எண்: 8

கடகம் 
மனம்தான் வாழ்வின் நுழைவாயில். ஏனெனில் நல்லது, கெட்டது எதுவும் மனதின் மூலமே வருகிறது. உங்களின் பிடிவாதமான குணத்தால் வீட்டில் உள்ளவர்களும் நெருங்கிய நண்பர்களும் வருத்தப்படுவார்கள்.  
அதிர்ஷ்ட எண்: 2

சிம்மம் 
உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள் தான் ஆக்கிரமித்திருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 1

கன்னி 
அச்சம், வெறுப்பு, பொறாமை, பழிவாங்குதல் போன்ற நெகடிவ் உணர்ச்சிகளை விட்டொழிக்கத் தயாராகுங்கள். போட்டி வரும்போது வேலைக்கான அட்டவணை கடுமையாக இருக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.  மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டிய நாள். 
அதிர்ஷ்ட எண்: 8

துலாம் 
உறவினர்கள் ஆதரவளித்து உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை தூக்கிவிடுவார்கள். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. 
அதிர்ஷ்ட எண்: 1

விருச்சிகம் 
பழங்கால பொருட்கள் மற்றும் நகைகளில் செய்யும் முதலீடு லாபத்தையும் வளத்தையும் கொண்டு வரும். வேலையில் இந்த நாள் உங்கள் நாளாகும். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு, மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். 
அதிர்ஷ்ட எண்: 3

தனுசு 
வேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும். பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல நாள். ஏனென்றால் எதிர்பாராத திடீர் லாபம் கிடைக்கும். 
அதிர்ஷ்ட எண்: 9

மகரம் 
உங்களுக்கு பண லாபத்தை ஏற்படுத்தக் கூடிய உற்சாகமான புதிய சூழ்நிலையைக் கண்டுபிடிப்பீர்கள். எந்த பிசினஸ், சட்ட ஆவணங்களையும் நன்றாக படித்துப் பார்க்காமல் கையெழுத்திடாதீர்கள். ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. 
அதிர்ஷ்ட எண்: 9

கும்பம் 
கடந்த காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால், உங்கள் வெறுப்புணர்ச்சி ஆரோக்கியத்தைக் கெடுக்கும். முடிந்த வரையில் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல. எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். 
அதிர்ஷ்ட எண்: 7

மீனம் 
இன்று உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்றம் நிச்சயம். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும்,  உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். 
அதிர்ஷ்ட எண்: 5