பணத்தை இழந்ததாக கூறிய பெண் -கற்பை இழந்ததாக கூறிய ஆண் -போலீசுக்கு போன பஞ்சாயத்து

 

பணத்தை இழந்ததாக கூறிய பெண் -கற்பை இழந்ததாக கூறிய ஆண் -போலீசுக்கு போன பஞ்சாயத்து

ஒரு பெண்ணை பற்றி அவதூறு கூறி ,அவரின் அக்கௌன்ட்டிலிருந்து பணத்தை எடுத்த கூட்டத்தை போலீசார் கைது செய்தனர் .

பணத்தை இழந்ததாக கூறிய பெண் -கற்பை இழந்ததாக கூறிய ஆண் -போலீசுக்கு போன பஞ்சாயத்து

மகாராஷ்டிராவின் மும்பையில் வகேலாவில் வசிக்கும் 33 வயதான பெண் அங்கு ஒரு நிறுவனத்தில்  ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிகிறார்.கடந்த வாரம் அவரின் வங்கி கணக்கிலிருந்து யாரோ ஒருவர்  ரூ .20,000 ரூபாய் மோசடி செய்ததாகக் கூறி, அவர் போலீஸ் புகார் அளித்தார்.இந்த வழக்கில் அவர்  தனது கணவர் மற்றும் அவரது நண்பர்  இஜாஸ் ஆகியோர் மீது சந்தேகப்படுவதாக போலிஸில் கூறினார் . இதனால் போலீசார் அவர்களை கூப்பிட்டு விசாரிக்க தொடங்கினார்கள் .இதனால்  இஜாஸின் நண்பர் ஃபர்ஹான் கான் அந்த பெண்ணிடம் புகாரைத் திரும்பப் பெறுமாறு மிரட்டத் தொடங்கினார்.

ஆனால் அந்த பெண் அவர்கள் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற மறுத்து விட்டார் .இதனால் கான் அந்த பெண்ணை இழிவு படுத்தி ,அவர் தன்னோடு  பல நாட்கள் லாட்ஜில் வந்து தங்கியதாகவும் .உல்லாசமாக இருந்ததாகவும் ஊர் முழுவதும் வதந்தி பரப்பினார் .

மேலும் பிப்ரவரி 2ம் தேதி அவர்கள் அந்த பெண்ணை அவர்கள் பின் தொடர்ந்து சென்று, அவரை சைகையால் கூப்பிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்கள் .இதனால் அந்த பெண் அந்த கான் மீது போலீசில் புகாரை கூறினார் .இதனால் போலீசார் கான் மீதும் அவரின் நண்பர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார்கள் ,அவர்களால் பாதிக்கப்பட்ட அந்த  பெண் அந்த பகுதியிருந்து தன்னுடைய வீட்டை காலி செய்து விட்டு மலாட் பகுதிக்கு சென்று விட்டார்  .

பணத்தை இழந்ததாக கூறிய பெண் -கற்பை இழந்ததாக கூறிய ஆண் -போலீசுக்கு போன பஞ்சாயத்து