பணத்திற்கும் உண்மைக்கும் இடையிலான தேர்தல் இது- ராகுல்காந்தி!

 

பணத்திற்கும் உண்மைக்கும் இடையிலான தேர்தல் இது- ராகுல்காந்தி!

பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, “பிரதமரின் குடும்பத்தை நான் மதிக்கிறேன், எனது குடும்பத்தை மோடி விமர்சித்ததை பற்றி கவலைப்படவில்லை. கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை தவறு என்று நாங்கள் அம்பலப்படுத்தினோம். மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பல்வேறு விவகாரங்களில் மோடி வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. தேர்தலில் மோடியும், அமித்ஷாவும் மிகப்பெரிய அளவில் பண பலத்தை பயன்படுத்தி உள்ளனர். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி. தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்பட்டது; மோடி பரப்புரை செய்ய ஏற்ற வகையில் 7 கட்ட தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது மே 23இல் மக்கள் தீர்ப்பை மதித்து அதற்கேற்றார் போல காங்., தோழமை கட்சிகள் முடிவெடுக்கும்” எனக்கூறினார். 

முன்னதாக வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஆர்எஸ்எஸ்ஸும், பாஜகவும் கடவுளை விரும்பவில்லை; கோட்சேவை விரும்புகிறார்கள்’’ என குறிப்பிட்டிருந்தார்.